- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜூலை 1JULY 1
ஜூலை 1
தேசிய மருத்துவர்கள் தினம்
National Doctors Day
இந்தியாவில் 1991 ,ஜூலை1 முதல் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் பிதான் சந்திரராய் (B. C. Roy) என்பவரின் நினைவாக (பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்) கொண்டாடபடுகிறது.
யார் இந்த பிதான் சந்திரராய் (B. C. Roy)?
பிதான் சந்திரராய் 1882 ஆம் ஆண்டு பாட்னாவில் பாங்கிபூர் எனும் கிராமத்தில் ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரே நேரத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் மருத்துவர் பட்டம் மற்றும் அறுவை சிகிச்சையாளர் பட்டமும் பெற்றவர். இவர் மருத்துவர், விடுதலைப் போராளி ,காங்கிரஸின் தலைவர் மற்றும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் முதலமைச்சராக ஆன பின்னும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கியுள்ளார். இவரது மக்கள் சேவையை போற்றும் வகையில் இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ல் பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது. B. C. Roy 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தனது 80 ஆவது வயதில் காலமானார். இவரது மருத்துவ சேவையை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு 1976ம் ஆண்டு முதல் மருத்துவ சேவை புரியும் மருத்துவர்களுக்கு டாக்டர் பி. சி. ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
| Join Social | |
|---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
Join YouTube |
Join Koo |
|



கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.