ஏப்ரல் 25

மே 19

மே 19
May 19

மே 19
உலகக் குடும்ப மருத்துவர் தினம்


ஒவ்வொரு ஆண்டும் மே 19ம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்குக் குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும் சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு – WONCA) 2010ல் முதன் முதலாக இந்நாளை அறிவித்தது.

அனைத்து நோயாளிகளுக்கும் தனிப்பட்ட, விரிவான மற்றும் தொடர் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் திறனின் மையப் பங்கை அங்கீகரிக்க இந்நாள் ஓர் அற்புதமான வாய்ப்பாகும்.

இந்நாளைக் கொண்டாடுவதின் நோக்கம்:

உலக அளவில் குடும்ப மருத்துவர்களின் பணியைக் கவனத்தில் கொண்டு வருவது.

குடும்ப மருத்துவர்களை அங்கீகரிப்பது.

குடும்ப மருத்துவர்களின் மனத்திண்மையை வலிமைப்படுத்துவது.

குடும்ப மருத்துவர்களோடு தொடர்புடைய முக்கியப் பிரச்சினைகளையும், உலகம் முழுவதும் சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணியாற்றுவதையும் முக்கியத்துவத்துக்குக் கொண்டுவருதல்

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்