- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஏப்ரல் 18
உலக பாரம்பரிய நாள்
World Heritage Day
பாரம்பரிய சின்னங்கள் கலாச்சாரத்தை, இயற்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள கலாசார கட்டுமானங்கள், தொன்மையான நினைவுச் சின்னங்களை போற்றிப் பேணுவதற்காக உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையான தனித்தன்மைகளையும் வரலாற்றுச் சிறப்பையும் கொண்டுள்ளது. அதை நமக்கு தெரிவிப்பது அதன் நினைவுச் சின்னங்களும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளும் பாரம்பரிய கலைகளும் ஆகும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி இத்தினம் கொண்டாடப்படுகிறது. 1982 இல் துனிசியாவில் நடைபெற்ற வரலாற்று அறிஞர்கள் மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைத்தது.
அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலகப் பாரம்பரிய தினமாக மாறியது. மக்களிடையே சமூக கலாச்சார பாரம்பரியத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரியப் பெருமைகொண்ட இடங்களை பாதுகாக்கவும், அவற்றின்மீது ஆர்வம் கொள்ளவும் தூண்டுகிறது.
இந்நாளில் கீழ்கண்ட செயல்களைச் செய்யலாம் என அம்மாநாடு பரிந்துரைத்தது.
- கட்டிட பெருமைகளைப்பற்றி கண்காட்சிகள் அமைப்பது
- நினைவிடம், அருங்காட்சியகத்திற்கு கட்டணம் இல்லாமல் பொது மக்களை அனுமதிப்பது.
- விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் ஏற்படுத்துவது,
- பொது இடங்களில் விவாதம் நடத்துவது,
- புத்தகங்கள், தபால்தலை முத்திரைகள் அச்சிடுவது
- பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
- பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்துவது
போன்ற சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
உலக அமெச்சூர் வானொலி தினம்
World Amateur Radio Day
அமெச்சூர் வானொலி (amateur radio) எனப்படுவது வணிக நோக்கமின்றி தனி நபர்களின் சொந்த முயற்சியால் ஒளிபரப்பப்படும் இருவழி தொடர்பாடல் வானொலி ஆகும்.
மற்ற வானொலிகளைப் போல் இலாப நோக்கம் இல்லாமல் சமூகத்திற்காக அல்லது பொழுது போக்கிற்காக நடத்தப்படுகின்ற வானொலியாகும். தொலைபேசி, கைபேசி, இணையம் போன்றவை இயங்காத நிலையில் கூட அமெச்சூர் வானொலி இயங்கக்கூடியது. இயற்கை இடர்பாடுகளின் போது (மழை, வெள்ளம்,..), தொலைபேசி போன்றவை செயல்படாத போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள இவை உதவுகின்றன.
நினைவு நாள் :-
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
Albert Einstein

கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.